கருணாநிதியுடன் மோடி சந்திப்பு; சுப்ரமணியன் சுவாமி கடும் விமர்சனம்


கருணாநிதியுடன் மோடி சந்திப்பு; சுப்ரமணியன் சுவாமி  கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 7 Nov 2017 12:40 PM IST (Updated: 7 Nov 2017 12:40 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தை, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை

சென்னையில் நேற்று நடந்த தினத்தந்தி பவளவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார்.  கருணாநிதி, முரசொலி பவளவிழா மலரை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது

இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மயிலாப்பூரில் இருக்கும் அறிவு ஜீவிகளின் ஆலோசனைப்படி தான் கருணாநிதியை மோடி சந்தித்தார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும், 2ஜி வழக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மயிலாப்பூரில் இருக்கும் அறிவு ஜீவிகளின் ஆலோசனைப்படி தான் கருணாநிதியை மோடி சந்தித்தார். வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால் அவகாசம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. வழக்கில் ஆ.ராசாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வேன்" என்று கூறினார்.

Next Story