நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகத்தில் வருமான வரி துறை சோதனை
சென்னையில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகத்தில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை,
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகத்தில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகத்தில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று ஜாஸ் சினிமாஸ், விவேக் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. விவேக், பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியின் மகன் ஆவார்.
பெங்களூருவில் உள்ள தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நமது எம்.ஜி.ஆர். நாளிதழை கைப்பற்ற அரசு முயற்சிக்கிறது என நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story