சசிகலா குடும்பத்தினர் வீடுகள்- நிறுவனங்கள் உள்பட 175 இடங்களில் வருமான வரிசோதனை முழு விவரம்


சசிகலா குடும்பத்தினர் வீடுகள்- நிறுவனங்கள் உள்பட 175 இடங்களில் வருமான வரிசோதனை முழு விவரம்
x
தினத்தந்தி 9 Nov 2017 10:32 AM IST (Updated: 9 Nov 2017 10:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு உள்பட 175-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர் வீடுகள், அவரது அலுவலகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானத் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீட்டுக்குள் டிடிவி தினகரன் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு முன் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசுதான் இந்த சோதனைக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

* நாமக்கல்லில்  சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

* கோவையில் மணல் குவாரிகளை குத்தகை எடுத்து நடத்தி வந்த ஆறுமுகசாமி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

* சென்னை: சவுகார்பேட்டையில் உள்ள சுரானா கார்ப்பரேசன் லிமிட் என்ற நிறுவனத்திலும், ஜெயா டிவியின் பொதுமேலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனைநடைபெற்று வருகிறது.

* சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

* கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்துவந்த சஜிவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

* மன்னார்குடி: திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

* சுரானா, சுனில், புதுச்சேர் ஸ்ரீ லட்சுமி, விண்ட் சுப்பிரமணியன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

* புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

* கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் தனி அறையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

* சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் வருமான வரி சோதனை  நடைபெற்று வருகிறது.

* தஞ்சை அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

* சென்னையில் உள்ள திவாகரன் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு- 2 வாகனங்களில் வந்த சோதனை நடைபெற்று வருகிறது சோதனை நடத்தி வருகின்றனர்.

* மன்னார்குடி: திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அன்பு வீட்டிலும் வருமான வரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.

* திருச்சியிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.
 
* சிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

* தஞ்சை: புதுக்கோட்டை சாலையில் உள்ள டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

* டிடிவி அணியின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன் வீட்டில் வருமானவரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.

* திவாகரன் ஆதரவாளர் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் வீட்டிலும் வருமானவரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.

* சென்னை : நீலாங்கரையில் உள்ள தினகரனின் உறவினர் பாஸ்கரன் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

* நமது எம்.ஜி.ஆர்., ஜாஸ் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.

* கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

* டிடிவி தினகரனுக்கு சொந்தமான காகித ஆலையிலும் வருமான வரிசோதனை நடைபெற்று  வருகிறது.

* கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகத்தில் சோதனை; அவிநாசி சாலையில் உள்ள செந்தில் வணிக வளாகத்தின் 6வது தளத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

*  புதுச்சேரி அடுத்த ஆரோவில் உள்ள டிடிவி தினகரன் பண்னை வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

*சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது.


Next Story