ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், கிருஷ்ணப்ரியா மற்றும் விவேக் வீடுகளில் 3வது நாளாக வருமான வரி சோதனை


ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், கிருஷ்ணப்ரியா மற்றும் விவேக் வீடுகளில் 3வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 11 Nov 2017 8:25 AM IST (Updated: 11 Nov 2017 8:25 AM IST)
t-max-icont-min-icon

ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், கிருஷ்ணப்ரியா மற்றும் விவேக் வீடுகளில் வருமான வரி துறை 3வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது.

இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 2வது நாளாகவும் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா மற்றும் விவேக் வீடுகளில் வருமான வரி துறை இன்று 3வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. வருமான வரி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


Next Story