வருமான வரி சோதனை குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பியது
சசிகலா, தினகரன் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்படும் வருமான வரிசோதனை குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பியது.
சென்னை
கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் 3-ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு, சசிகலாவின் வழக்குறைஞர், அவரது நண்பர் மற்றும் ஜோதிடர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வருமான வரிச்சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து முதல்கட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story