3 நாட்கள் வருமான வரி சோதனையில் கோடிகணக்கான பணம் -தங்க நகைகள் - சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு
3 நாட்கள் வருமான வரி சோதனையில் அதிகாரிகள் கோடிகணக்கான ரொக்க பணம் -தங்க நகைகள்-சொத்து ஆவணங்களை கண்டுபிடித்து உள்ளனர்.
சென்னை,
சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். இன்று 3 வது நாளாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.நேற்று அவர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 நாட்கள் நடந்த சோதனையில் திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் பணம்- தங்கம், வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர். வருமான வரிச்சோதனையில் கணக்கில் வராத பல கோடி பணம், தங்கம் - வைர நகைகள், சொத்து ஆவணங்கள், 60 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் சிக்கியது.
நீலாங்கரையில் உள்ள தினகரனின் சகோதரர் பாஸ்கரன் பங்களாவில் 7 கிலோ தங்க நகைகளும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
மன்னார்குடி சுந்தரகோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.
அந்த கல்லூரியில் பயன்படுத்தப்படாத விடுதி அறைகள் பூட்டிக் கிடந்தன. அவற்றை திறக்கச் சொல்லி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரூ.6 கோடி ரொக்கப் பணம், ரூ.2.4 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ தங்கம் & வைர நகைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
மேலும் உரிமையாளர்கள் யார் என குறிப்பிடப்படாமல் மொத்தம் ரூ.1,200 கோடிக்கணக்கான சொத்து மற்றும் முதலீடுகளுக்கான ஆவணங்களும் சிக்கியது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story