ஜி.எஸ்.டி.யின் தேவையை சில மாதங்களில் வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


ஜி.எஸ்.டி.யின் தேவையை சில மாதங்களில் வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள்:  பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2017 10:23 AM IST (Updated: 12 Nov 2017 10:23 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யின் தேவையை இன்னும் சில மாதங்களில் வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி,

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை இந்தியா முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.  இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் வலுப்பெற்று வந்தது.

இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் 178 பொருட்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இந்த வரி குறைப்பு வருகிற 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.  இந்த நிலையில், திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

அவர், உணவு விடுதிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.  உணவு பொருட்கள், ஓட்டல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது.  முன்பு இருந்ததை விட ஜி.எஸ்.டி. மிக குறைவு என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் ஜி.எஸ்.டி.யின் தேவையை வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சுய அதிகாரம் படைத்த வருமான வரி துறை சோதனையை அரசியலாக்க கூடாது.  மற்ற மாநிலங்களில் வருமான வரி சோதனை நடந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.

Next Story