ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்


ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 13 Nov 2017 5:46 PM IST (Updated: 13 Nov 2017 5:45 PM IST)
t-max-icont-min-icon

சோதனை நிறைவடைந்த நிலையில் விவேக்-ஐ வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 5-வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரிசோதனை இன்று நிறைவுபெற்றது

சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 167 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இன்று (5-வது நாளாக 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

அந்த வகையில், இளவரசியின் மகன் விவேக் இல்லம், தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அங்குள்ள வரவு, செலவு கணக்குகள், போலி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் உள்ளதா? என வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் இன்று மாலை  முழுமையாக நிறைவுபெற்றன. மொத்தம் 106 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்.

சோதனைக்கு பின் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.  வருமான வரிசோதனை முடிந்த பிறகு ஜெயா டிவி சிஇஓ விவேக்கை அங்கேயே சம்மன் வழங்கி விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

Next Story