சசிகலா குடும்பத்தினர் 60 போலி நிறுவனங்களில் 355 பேருக்கு தொடர்பு வருமான வரித்துறை விரைவில் விசாரணை
சசிகலா குடும்பத்தினரின் 60 போலி நிறுவனங்களில் 355 பேருக்கு தொடர்பு உள்ளது.அனைவரிடமும் வருமான வரித்துறை விரைவில் விசாரணை நடத்த உள்ளது.
சென்னை,
சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 5 நாட்களாக நடத்திய அதிரடி சோதனை நேற்றி ரவு முடிவுக்கு வந்தது.
சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள். 187 இடங்களில் 1,600-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.
ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஜாஸ் சினிமாசின் மூன்று முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது தொடர்பான கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு மூன்று பேரும் சொன்ன பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இது தவிர அவர்கள் கொடுத்த வாக்குமூலம் எழுத்துப் பூர்வமாகவும் பெறப்பட்டது.
இவர்களைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. திவாகரனிடம் இன்று மாலை அல்லது நாளை (புதன் கிழமை) விசாரணை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்து உறவினர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளனர்.
இதுகுறித்து வருமான வரித் துறை வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:-
நாங்கள் நடத்திய சோதனை 99 சதவீதம் முடிந்து விட்டது. இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 251 இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். பல சொத்துக்கள் பினாமிகள் பெயரில் உள்ளன.
இது தவிர சசிகலா குடும்பத்தினர் 60 போலி நிறுவனங்களை நடத்தி வந்ததும் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் நிறைய பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். மொத்தத்தில் நேரிடையாகவும், மறைமுக மாகவும் 355 பேருக்கு இதில் தொடர்புள்ளது. அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம்.
போலி நிறுவனங்கள் மற்றும் சொத்து ஆவணங்களில் பெரும்பாலானவை விவேக், அவர் சகோதரி கிருஷ்ணபிரியா பெயர்களில் உள்ளது. எனவே அவர்கள் இருவரை சுற்றியே அதிகபட்ச விசாரணை இருக்கும். இவர்கள் நிறுவனங்கள், சொத்துக்கள் பற்றி நாங்கள் தற்காலிக அறிக்கை ஒன்றை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி உள்ளோம்.
டெல்லியில் இருந்து உத்தரவுகள் வந்ததும் அதற் கேற்ப எங்களது விசாரணைகள் மாறும். இதற்கிடையே ரூ.1430 கோடி வரி ஏய்ப்பு பற்றி விசாரிக்க ஒரு குழுவும், 16 லாக்கர்களை திறக்க மற்றொரு குழுவும் உருவாக்கி இருக்கிறோம். எனவே விரைவில் வங்கி லாக்கர்கள் திறக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். என தெரிவித்து உள்ளது.

Related Tags :
Next Story