திவாகரன்,விவேக், கிருஷ்ண பிரியா நேரில் ஆஜராக வரித் துறை நோட்டீஸ்
திவாகரன் மற்றும் விவேக், சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராகவும் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.
சென்னை,
சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 5 நாட்களாக நடத்திய அதிரடி சோதனை நேற்றிரவு முடிவுக்கு வந்தது.
சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள். 187 இடங்களில் 1,600-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.
ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஜாஸ் சினிமாசின் மூன்று முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது தொடர்பான கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு மூன்று பேரும் சொன்ன பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இது தவிர அவர்கள் கொடுத்த வாக்குமூலம் எழுத்துப் பூர்வமாகவும் பெறப்பட்டது.
இவர்களைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. திவாகரனிடம் இன்று மாலை அல்லது நாளை (புதன் கிழமை) விசாரணை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்து உறவினர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளனர்.
இந்த நிலையில் திவாகரன் மற்றும் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராகவும் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.
ஜெயா டி.வி முதன்மை செயல் அதிகாரி விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story