பறவை மோதியதால் 134 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்
பறவை மோதியதால் 134 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னை,
சென்னையில் இருந்து கத்தார் நாட்டில் உள்ள தோஹாவுக்கு 134 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது.
இதனால், விமானம் சேதம் அடைந்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி உடனடியாக மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக தோஹாவுக்கு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story