22-ந்தேதி ரேசன் கடை முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


22-ந்தேதி ரேசன் கடை முன்பு  தி.மு.க. ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2017 8:57 AM GMT (Updated: 17 Nov 2017 8:57 AM GMT)

கடும் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. ஆர்ப்பாட்டம் 22-ந்தேதி நடைபெறும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள  அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் -பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடும் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அனைத்து  ரேஷன் கடைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 22-ந்தேதி நடை பெறும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story