ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 17 Nov 2017 5:36 PM GMT (Updated: 17 Nov 2017 5:37 PM GMT)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற அனுமதி பெற்று வேதா இல்லத்தில் உள்ள பூங்குன்றன் அறையில் 3 அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் வருகை தந்து உள்ளார். வேதா இல்லத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story