இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு, விஜயகாந்த் கேள்வி


இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு, விஜயகாந்த் கேள்வி
x
தினத்தந்தி 18 Nov 2017 4:15 AM IST (Updated: 18 Nov 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இந்த ஆண்டு ஜூன் 30–ந் தேதி வரை வேலைக்காக பதிவுசெய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை மொத்தம் 81 லட்சம் பேர்.

இதில் 57 வயதில் காத்திருப்பவர் 5,709 பேரும், முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் 1 லட்சத்து 33 ஆயிரம் பேரும், முதுநிலை பட்டதாரிகள் 2 லட்சத்து 38 ஆயிரம் பேரும், பொறியாளர் இளநிலை பட்டதாரிகள் 2 லட்சத்து 46 ஆயிரம் பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 2 லட்சத்து 17 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 9 ஆயிரம் பேரும், சட்டம் படித்தவர்கள் 2,536 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 383 பேரும், பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 4 லட்சத்து 20 ஆயிரம் பேரும் மேலும் இன்னும் பலர் விரக்தியில் பதிவு செய்யாமலே வேலைதேடி அலைகின்றனர்.

படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருந்து, காத்திருந்து இறுதியில் தன் எதிர்கால கனவுகளை தகர்த்து, தன் குடும்பத்தையும் காப்பாற்ற முடியாமல், சமூக விரோதிகளாகவும் மாறுவதன் விளைவுதான், இன்று நடக்கிற கொலை, கொள்ளை, தற்கொலைகள், கற்பழிப்பு முதலியவற்றின் மூலவித்தாக மாறுகின்றது.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார் என்பதை தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story