நள்ளிரவு வருமான வரிசோதனை சசிகலா அறையில் கடிதங்கள்- லேப் டாப்,பென் டிரைவ் சிக்கியது
போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நேற்று இரவு நான்கு மணி நேர சோதனையில் சசிகலா அறையில் கடிதங்கள்- லேப் டாப் பென் டிரைவ் சிக்கியது.
சென்னை
சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாள்களுக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனை முடிவில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வியின் தலைமைச் செயலதிகாரி விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை நேற்று இரவு நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தினர். நேற்றைய சோதனையில் ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு பென்ட்ரைவை வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
சசிகலா, இளவரசி, விவேக் உள்ளிட்டோருக்கும் இந்த விலாசத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை இருக்கின்றன. ஜெயலலிதாவுடனே இருந்த இவர்களுக்கும் இதே விலாசம் தான் அடையாளமாக இருக்கிறது.
ஆவணங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது .
நள்ளிரவு சசிகலா அறை திறக்கப்பட்டு சோதனை நடந்தது. அந்த அறைக்குள்ளும் ஒரு கம்ப்யூட்டர், சில எலக்டர்ரானிக் கருவிகள், ஆவணங்கள் இருந்தன. அ.தி.மு.க. கட்சி நிர்வாகம் தொடர்பான கடிதங்களும் இருந்தன. அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதை ஆய்வு செய்தனர். அந்த கம்ப்யூட்டரில் என்னென்ன பதிவுகள் உள்ளன என்று தெரியவில்லை. என்றாலும் அதிகாரிகள் அந்த கம்ப்யூட்டரை கைப் பற்றி தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.

Related Tags :
Next Story