போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அனவர்ராஜா எம்பி
போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அன்வர்ராஜா எம்.பி கூறினார்.
சென்னை
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது குறித்து அ.தி.மு.க எம்.பி அன்வரராஜா கூறியதாவது:-
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை சுத்தப்படுத்த இந்த சோதனை உதவியாக இருக்கும்; வருமானவரி சோதனையால் களங்கம் ஏற்படவில்லை; சோதனையால் களங்கம் துடைக்கப்படும். வருமான வரித்துறைக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.போயஸ் கார்டன் இல்லத்தில் ஆவணங்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; வருமானவரி சோதனைக்கு பின்னால் பாஜக உள்ளதா என பின்னர்தான் தெரியும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story