தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
அதிமுக தொண்டர்களின் எண்ணப்படி ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துவோம் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது விழாவில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றுள்ளனர்.34.07 கோடி மதிப்பிலான புதிய நலப்பணித்திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விழாவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:-
போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை மன வேதனையை தருகிறது .மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. மாநில அரசின் திட்டங்களுக்கு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை பெறுவதன் மூலம் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என கூறினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எந்த சவாலாக இருந்தாலும் அவற்றை வெல்லக்கூடிய வீரராக இருந்தவர் எம்ஜிஆர். தனி ஒரு பெண்ணாக எதிரிகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா.
அதிமுக தொண்டர்களின் எண்ணப்படி ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துவோம். தமிழ்நாட்டை அதிமுகதான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் . மக்கள் விரும்பும் படி ஆட்சி நடைபெறும். அதி.மு.கவில் 90 சதவீதம் விவசாயிகள் தான் உள்ளனர்.நானும் ஒரு விவசாயிதான்.
15,689 பயனாளிகளுக்கு ரூ.39.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டத்தில் 127 பணிகளுக்கு அடிக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டன என்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தி.முக ஆட்சிக்கு வர முடியாததற்கு காரணம் அவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story