இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே மீனவர்களுக்கான சரியான தீர்வாக இருக்கும்; பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக மீனவர்கள் கைதினை தடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது. கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் இன்று இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, தமிழக மீனவர்கள் கைதினை தடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே சரியான தீர்வாக இருக்கும் என கூறினார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என நாங்கள் செயல்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story