தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2017 6:47 PM GMT (Updated: 21 Nov 2017 6:47 PM GMT)

வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வருகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரை இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குமரி முதல் கோவளம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

மணிமுத்தாறு 10 செ.மீ., பாபநாசம் (நெல்லை மாவட்டம்) 9 செ.மீ., கன்னியாகுமரி 8 செ.மீ., சேரன்மகாதேவி, நாகர்கோவில், மயிலாடி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் தலா 6 செ.மீ., இரணியல், குளச்சல், பூதப்பாண்டி தலா 5 செ.மீ., செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் தலா 4 செ.மீ., தக்கலை 3 செ.மீ., சாத்தான்குளம், குன்னூர், தூத்துக்குடி, கோத்தகிரி, பேச்சிப்பாறை, குழித்துறை, ஆய்க்குடி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 10–க்கு மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


Next Story