அ.தி.மு.க.வில் மனங்கள் இணையவில்லை என கூறியது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் எம்.பி.


அ.தி.மு.க.வில் மனங்கள் இணையவில்லை என கூறியது அடிமட்ட தொண்டர்களின் கருத்து:  மைத்ரேயன் எம்.பி.
x
தினத்தந்தி 22 Nov 2017 10:16 AM IST (Updated: 22 Nov 2017 10:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் மனங்கள் இணையவில்லை என கூறியது அடிமட்ட தொண்டர்களின் கருத்து என மைத்ரேயன் எம்.பி. முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர்  தனது பேஸ்புக்கில், 'ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. 'மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என்று பதிவிட்டுள்ளார்.

மைத்ரேயனின் பேஸ்புக் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என தம்பிதுரை எம்.பி. நேற்று கூறினார்.

இந்நிலையில், நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல.  அது அடிமட்ட தொண்டர்களின் கருத்து என மைத்ரேயன் எம்.பி. இன்று கூறியுள்ளார்.  அடிமட்ட தொண்டர்களின் உணர்வையே நான் எதிரொலித்துள்ளேன் என்றும் முகநூல் வழியே அவர் தெரிவித்துள்ளார்.

Next Story