அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
தூத்துக்குடி
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங் களிலும் கொண்டாடாடபட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் தொடக்கவிழா கடந்த 30.06.2017 அன்று மதுரையில் நடைபெற்றது.
25-வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு விழா தொடங்கியது
சட்டசபை பேரவைத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். விழாவில் கலந்து பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும் என கூறினார்.
அவர் விழாவில் பேசும் போது அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் 2018-19-ல் மணி மண்டபம் கட்டும் பணிகள் துவங்கும் என கூறினார்.
Related Tags :
Next Story