அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை: ரஜினிகாந்த்


அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை: ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 22 Nov 2017 7:11 PM IST (Updated: 22 Nov 2017 7:11 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இதற்கிடையில், நடிகர் கமலும் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து விட்டதால், ரஜினிகாந்த் எப்போது அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்,” அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை. எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதிக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க உள்ளேன். காலா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story