அரசு அலுவலர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்


அரசு அலுவலர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Nov 2017 5:50 PM GMT (Updated: 22 Nov 2017 5:50 PM GMT)

அரசு அலுவலர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அரசுப் பணியில் உள்ள அலுவலர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர்கள் ஆகியோரின் ஊதிய மாற்றம் செய்வதற்கு அரசால் குழு நியமனம் செய்யப்பட்டது. அக்குழு ஊதிய மாற்ற பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. திருத்தப்பட்ட ஊதிய மாற்றம் 1–1–2016–ல் இருந்து அமல்படுத்த வேண்டும்.

ஆனால், ஊதிய திருத்த அறிக்கையானது 1–10–2017–ல் இருந்து நடைமுறைப்படுத்துகின்றது. 1–1–2016–ல் இருந்து 31–9–2017–ல் வரையிலான இடைப்பட்ட 21 மாத நிலுவைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்,ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர்கள் ஆகியோர்களுக்கு நிலுவைத்தொகையினை இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story