வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை
வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பணப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 11-ம் வகுப்பு மாணவிகளான ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மணிஷா ஆகியோர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உள்ளனர். கிணற்றில் இருந்து மாணவிகள் 4 பேரது உடலும் மீட்கப்பட்டது. ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாணவிகள் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர்கள் கூறியதால் மாணவிகள் விபரீத முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story