வங்கிகளுக்கு 2-ந்தேதி விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு


வங்கிகளுக்கு 2-ந்தேதி விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு
x

மிலாது நபி பண்டிக்கைக்கான பொது விடுமுறை நாளாக டிசம்பர் 1-ந்தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை,

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மிலாது நபி பண்டிக்கைக்கான பொது விடுமுறை நாளாக டிசம்பர் 1-ந்தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மிலாது நபி பண்டிகை தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதையடுத்து ரிசர்வ் வங்கியும் டிசம்பர் 2-ந்தேதியன்று செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ், தமிழ்நாட்டில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.Next Story