ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்


ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 24 Nov 2017 8:00 PM GMT (Updated: 24 Nov 2017 7:44 PM GMT)

நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு கடந்த மாதம் நடந்தது. சென்னையில் நடந்த இந்த தேர்வில் செல்போன் ‘புளுடூத்’ மூலம் காப்பி அடித்ததாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சபீர் கரீம் காப்பி அடிக்க உதவியதாக அவருடைய மனைவி ஜாய்சி, மானேஜர் ராம்பாபு மற்றும் 2 நண்பர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட ஜாய்சி மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சபீர் கரீம் காப்பி அடித்த வழக்கை எழும்பூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் மற்றும் அவரது மானேஜர் ராம்பாபு ஆகியோரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

ஜாமீன் நிபந்தனைப்படி நேற்று காலையிலும், மாலையிலும் ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம், அவருடைய மனைவி ஜாய்சி, மானேஜர் ராம்பாபு ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்து போட்டனர்.

அப்போது அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

Next Story