ஒகி புயல் பாதிப்பு மீட்பு பணி: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஒகி புயல் பாதிப்பு மீட்பு பணி: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Dec 2017 4:15 AM IST (Updated: 4 Dec 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயல் பாதிப்பு மீட்பு பணி: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணவில்லை என்ற செய்தியும், 20–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியும், அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது.

மேலும் அப்பகுதி வாழ் மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிப்பதை பார்க்கும்போது, ஏற்கனவே வந்த சுனாமியால் ஏற்பட்ட தாக்கம் நம் நினைவுக்கு வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில், இதேபோன்று பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் கேரள அரசு பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தகுந்த பாதுகாப்பும், வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.

எனவே தமிழக அரசு எப்போதும் போல் மெத்தனப்போக்கையே கடைபிடிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் துரிதமாக நிவாரண பணிகளை செயல்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். தே.மு.தி.க. சார்பிலும் முடிந்த உதவிகளை செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story