ஓகி புயல் பாதிப்பு : கன்னியாகுமரியில் நாளை - நாளை மறுநாள் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னை
ஒகி புயல் தாக்குதல் காரணமாக குமரி மாவட் டத்தில் கடுமையான
பாதிப்புகளும், சேதங்களும் ஏற்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
ஆனாலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளதாலும் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்துவிட்டதாலும் மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது.
நாகர்கோவில் நகரம் உள்பட ஒவ்வொரு பகுதியாக மின் வினியோகம் சீரமைக் கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று 6 வது நாளாக சீரான மின் வினியோகம் கிடைக்க வில்லை. பல பகுதிகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. மேலும் மின் வினியோகம் இல்லாததால் குடிநீர் சப்ளையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீருக்காக பெண்கள் அலையும் பரிதாப நிலையும் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாவட்டம் முழுவதும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story