பிற மாநிலங்களில் உள்ள தமிழக மீனவர்கள் 2805 பேர் பத்திரமாக உள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
பிற மாநிலங்களில் உள்ள தமிழக மீனவர்கள் 2805 பேர் பத்திரமாக உள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.காணாமல் போன மீனவர்களை மீட்க முப்படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசித்துள்ளார்; மேலும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் ஆட்கள் இல்லாத தீவுகளில் பத்திரமாக கரை ஒதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் மீட்பு பணிகளில் கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் உள்ள மீனவர்கள் தமிழகம் திரும்ப அவர்களின் தேவைக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் ஆளில்லாத தீவில் ஒதுங்கியிருக்க வாய்ப்பு, அவர்களை மீட்கும் பணி தீவிரம்.
கேரளாவில் 150 பேர், லட்சத்தீவில் 252 பேர், மகாராஷ்டிராவில் 832 மீனவர்கள் உள்ளனர்.பிற மாநிலங்களில் உள்ள தமிழக மீனவர்கள் 2805 பேர் பத்திரமாக உள்ளனர். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story