நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை


நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 12 Dec 2017 7:21 AM IST (Updated: 12 Dec 2017 7:21 AM IST)
t-max-icont-min-icon

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஷ்வரம்,

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, 5 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது.  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Next Story