‘எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ தி.மு.க. கோரிக்கை


‘எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2017 4:30 AM IST (Updated: 15 Dec 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்: ‘எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ தி.மு.க. கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் 21–ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 24–ந்தேதி அறிவித்து இருந்தது. அதன்படி அந்த தொகுதியில் கடந்த மாதம் 24–ந் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கடந்த 13–ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது www.rknagar.in என்ற இணையதளத்தை தொடங்கி, அதில் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தால் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி இதுபோன்ற அறிவிப்புகள் அமைச்சர்கள் வெளியிடக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மீறிய செயலாகும். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story