ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும் இயக்குநர் கவுதமன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் இயக்குநர் கவுதமன் மாணவர்கள் அமைப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
பின்னர் தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்து பணப்பட்டுவாடா தொடர்பாக காவல் துறை கூடுதல் ஆணையர் ஜெயராமனை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்–ஒழுங்கு மற்றும் அதிகாரங்கள் எல்லாம் தற்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தாமல் அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய உதவி வருகின்றனர். இது ஜனநாயக படுகொலை. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீர் மாநிலத்திலே தேர்தல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நடந்தது. ஆனால் ஆர்.கே.நகர் பகுதியில் தற்போது பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். தற்போது ஆர்.கே.நகர் பகுதியில் ரூ.500 கோடிக்கு மேல் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் இந்த தேர்தலை உடனடியாக தேர்தல் ஆணையம் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story