ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் ‘டெபாசிட்’ இழப்பார் அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்
ஆர்.கே.நகர் மக்கள் டி.டி.வி.தினகரனை புறக்கணிப்பார்கள். அவர் டெபாசிட் இழப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் தண்டையார்ப்பேட்டை வினோபா நகரில் நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கோட்டை. நேற்று, இன்று, நாளை என எப்போதும் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்.
நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கிறோம். சட்டத்தின்படி நடக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்கிறோம். டி.டி.வி.தினகரன் சட்டத்துக்கு புறம்பாக நடக்கிறார். போலீஸ் அதிகாரிகளை அச்சுறுத்துகிறார்.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி குறுக்குவழியில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். ஆர்.கே.நகர் மக்கள் டி.டி.வி.தினகரனை புறக்கணிப்பார்கள். அவர் ‘டெபாசிட்’ இழப்பார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story