ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது மு.க. ஸ்டாலின்


ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Dec 2017 2:42 PM IST (Updated: 20 Dec 2017 2:55 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.



சென்னை,

ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையமும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். வீடியோ வெளியீடு தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், வீடியோ உண்மையோ, பொய்யோ அதில் தான் தலையிட விரும்பவில்லை, தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும்.  அரசியலுக்காக கீழ்த்தரமாக ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டு உள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை முன்பே வெளியிட்டிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த வீடியோ எந்தஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறிஉள்ளார். 

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 


Next Story