ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம்
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையமும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிப்பரப்புவதை நிறுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பேசுகையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் தான் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என கூறுகிறோம். சைபர் க்ரைம் போலீஸ் மூலம் சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story