வீடியோ வெளியிட்டு வெற்றிவேல் துரோகம் செய்து விட்டார் கிருஷ்ணபிரியா கண்டனம்
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டு வெற்றிவேல் துரோகம் செய்து விட்டார் என இளவரசி மகள் கிருஷ்ணபிரியா கூறி உள்ளார்.
சென்னை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.
தற்போது இந்த வீடியோ குறித்த பலவேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டது டிடிவி தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என இளவரசியின் மகளும் விவேக்கின் சகோதரியுமான கிருஷ்ணபிரியா தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார்.
இது குறித்து கிருஷ்ணபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலாவுக்கு தெரியாமல் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ கொடுத்தது நாங்கள் தான். கொடுக்க சொன்னது சசிகலாதான். விசாரணை ஆணையத்தில் சமர்பிக்க டிடிவி தினகரனிடம் கொடுக்கபட்ட வீடியோ. இது வெற்றிவேல் கையில் வந்தது எப்படி. வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.
கொலைபழி வந்தபோது கூட இந்த வீடியோவை சசிகலா வெளியிடவில்லை. ஜெயலலிதா சொன்னதால்தான் சசிகலா வீடியோவை எடுத்தார். முன்பே வீடியோவை வெளியிடும்படி ஊடகத்தினர் கேட்ட போது கூட சசிகலா மறுத்தார் டிடிவியிடம் கொடுக்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் ஏன் சென்றது எப்படி சென்றது இதற்கான விடைதெரியவில்லை. சசிகலா அனுமதி இல்லாமல் இது வெளியிடப்பட்டு உள்ளது. வெற்றிவேல் மீது தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை டிடிவி தினகரனிடம் இது குறித்து நான் கேட்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story