ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுகிறது


ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 21 Dec 2017 1:16 PM GMT (Updated: 21 Dec 2017 1:16 PM GMT)

ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் வாக்காளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.


சென்னை, 


காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர் கூட்டம் அலைமோதி வருகிறது. வாக்களிக்க 84 வாக்குச்சாவடிகளில் சுமார் 5,000 பேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story