கிருஷ்ணபிரியா பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது, பக்குவமில்லாமல் பேசி வருகிறார்- டிடிவி தினகரன்


கிருஷ்ணபிரியா பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது, பக்குவமில்லாமல் பேசி வருகிறார்- டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 22 Dec 2017 2:01 PM IST (Updated: 22 Dec 2017 2:01 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணபிரியா பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது, பக்குவமில்லாமல் பேசி வருகிறார் என டிடிவி தினகரன் கூறினார்

சென்னை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  போது எடுத்த வீடியோ என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பினர்.ஆர்.கே.நகர் தேர்தலை வைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்லதாக குற்றசாட்டு எழுந்தது. 

இந்த  வீடியோ விவகாரம்  குறித்து  கருத்து தெரிவித்த  இளவரசி மகள் தற்போது வெளியான ஜெ. வீடியோவை, முதலில் கொடுக்க சொன்னதே நாங்கள்தான். வெற்றி வேல் துரோகம் செய்து விட்டார். வெற்றி வேல் செய்தது  கீழ்த்தரமான செயல் என்றும் கிருஷ்ணபிரியா கூறியிருந்தார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறும் போது, ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோவை, கிருஷ்ணபிரியாவிடம் இருந்து வாங்கவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு  கிருஷ்ணபிரியாவிடம், உங்களிடம் இருந்து ஜெயலலிதா  சம்பந்தப்பட்ட வீடியோவை வாங்கவில்லை என்று தினகரன் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த கிருஷ்ணபிரியா, நான் மிகுந்த மனவேதனையுடன்தான் ஊடகங்களைச் சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது வீடியோவை கொடுத்தது நாங்கள்தான் என்று கூறினேனே தவிர நான் என்று கூறவில்லை என்றார். பெங்களூரு சிறையில் சசிகலாவை, நான், சகோதரி ஷகிலா, சகோதரர் விவேக் ஆகிய மூவரும் சந்தித்தோம்.

அப்போது, சசிகலா, ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷனோ, வேறு எவ்விதமான விசாரணையே அமைக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். அதனால் வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்து விடுங்கள். என்று கூறியிருந்தார். இதனை அடுத்து, விவேக், ஜெயலலிதா  வீடியோ காப்பி ஒன்றை எடுத்து தினகரனிடம் கொடுத்தார்.

இதனால்தான் நாங்கள் என்று நான் கூறியிருந்தேன். என் கையில் இருந்து வாங்கினார் என்று நான் கூறவேயில்லை. வேண்டுமானால் ஊடகத்தில் பதிவு செய்ததை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றும்  கிருஷ்ணபிரியா கூறியிருந்தார்.

தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை டிடிவி தினகரனிடம் காப்பி எடுத்து கொடுத்தது விவேக் தான் என்றும். வீடியோவை கொடுத்தது நாங்கள் தான் என்று கூறினேனே தவிர நான் என்று கூறவில்லை என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மதுரையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து எனக்கு தெரியாது.  ஆர்.கே. நகர் தொகுதி யில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்து மக்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள்.  
 
ஜெயலலிதா வீடியோ  வெளியானது குறித்து கிருஷ்ணபிரியா பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது, பக்குவமில்லாமல் பேசி வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story