ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான வழக்கில் வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி


ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான வழக்கில் வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 22 Dec 2017 3:28 PM GMT (Updated: 22 Dec 2017 4:29 PM GMT)

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வழக்கில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை சென்னை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.சென்னை, 

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20–ந் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் சார்பில் கொடுத்த புகார் மனு மீது போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
 
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அவருடைய முன்ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.


Next Story