ஆ.ராசா, கனிமொழி சென்னை வருகை; மு.க.ஸ்டாலின் வரவேற்பு தொண்டர்கள் உற்சாகம்


ஆ.ராசா, கனிமொழி சென்னை வருகை; மு.க.ஸ்டாலின் வரவேற்பு தொண்டர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 23 Dec 2017 12:57 PM IST (Updated: 23 Dec 2017 12:58 PM IST)
t-max-icont-min-icon

ஆ.ராசா, கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்றார். தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

சென்னை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினர்.  தங்கை கனிமொழியை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வரவேற்றார்

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆர். ராசா , கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்பினர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 சென்னை திரும்பிய கனிமொழியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின். ஆர்.ராசா மற்றும் கனிமொழி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இது எங்களின் வெற்றி இனி எங்கும் எதிலும் வெற்றிதான் என்று மகளிர் அணியினர் மகிழ்ச்சி பெருக்குடன் கூறினர். எங்களுக்கு புத்தாண்டு இப்போதே வந்துவிட்டது என்றும் தெரிவித்தனர்.

விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலைய பகுதியே களைகட்டியுள்ளது.

2ஜி வழக்கில் விடுதலையான ஆர்.ராசா, கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அவர்களை மு.கஸ்டாலின் மற்றும் தி.மு.க தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆகியோர்  வரவேற்றனர். தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

Next Story