காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் அழிக்கப்பட்ட இந்து சமய ஓவியங்களை மீண்டும் வரையும் பணி தொடங்கியது


காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் அழிக்கப்பட்ட இந்து சமய ஓவியங்களை மீண்டும் வரையும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Dec 2017 10:00 PM GMT (Updated: 23 Dec 2017 7:47 PM GMT)

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் மர்ம நபர்கள் அழிக்கப்பட்ட இந்து சமய ஓவியங்களை மீண்டும் வரையும் பணி தொடங்கியது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்துக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ரெயில்வே நிர்வாகத்தால் காஞ்சீபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், சிற்பங்கள், ராமானுஜர், ஆதிசங்கரர், காமாட்சியம்மன், பெருமாள், பல்லிகள் போன்ற ஆன்மிக ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் திடீரென அந்த ஓவியங்களை மர்ம நபர்கள் பெயிண்டால் அழித்து விட்டு சென்று உள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காஞ்சீபுரம் இந்து முன்னணி நகர தலைவர் எம்.வாஞ்சிநாதன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி உள்ளதாவது:-

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் வரைந்து இருந்து வரலாற்று சிறப்பு மிக்க கடவுள் ஓவியங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள்தான் பெயிண்டால் அழித்து உள்ளனர்.

இது இந்து மதத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த செயல் இந்து மதத்தினரை மிகவும் புண்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது..

இதற்கிடையில் மர்மநபர்களால் அழிக்கப்பட்ட இந்த கடவுள்களின் ஓவியங்களை மீண்டும் வரையும் பணி தொடங்கி உள்ளது.

Next Story