ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கருத்து


ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கருத்து
x
தினத்தந்தி 24 Dec 2017 10:52 PM IST (Updated: 24 Dec 2017 10:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

அப்போது அவரிடம் தேர்தல் முடிவுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, ‘ஆர்.கே.நகர் மக்கள் தங்களுடைய ஓட்டுகளை விலைக்கு விற்று விட்டனர். அதிக பணம் கொடுத்தவர் வெற்றி பெற்றுள்ளார். குறைந்த பணம் கொடுத்தவர்கள் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.’ என்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் கூறும்போது, ‘தேர்தல் முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் தேசிய கட்சியான பா.ஜ.க. வேட்பாளரை விட நான் அதிக வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தோல்வி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சோகத்துடன் சென்றுவிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது, ‘அமோக வெற்றி பெறுவேன்’ என்று தெரிவித்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தேர்தல் முடிவுக்கு பின்னர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story