அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி


அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 25 Dec 2017 2:07 PM IST (Updated: 25 Dec 2017 2:07 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது  

ஆர்.கே.நகரில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தும் அணி தாவலை தடுப்பது குறித்தும்  அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு மணி நேரமாக கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டு உள்ளது.   வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் , ரெங்க சாமி, வி.பி.கலைராஜன், பார்த்தீபன், பாப்புலர் முத்தையா ஆகிய 6 மாவட்ட செயலாளர்களை  நீக்க ஆலோசனை கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு கிடைத்தது தோல்வியே அல்ல.  மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளார். ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு கிடைத்தது தோல்வியே அல்ல என கூறினார்.

Next Story