அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லையும் யாராலும் உருவ முடியாது- ஓ.பன்னீர் செல்வம்


அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லையும் யாராலும் உருவ முடியாது- ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 25 Dec 2017 10:01 AM GMT (Updated: 25 Dec 2017 10:01 AM GMT)

அதிமுகவில் பிளவுகள் ஏதும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லையும் யாராலும் உருவ முடியாது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை

அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்திற்கு  பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், 

துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவும் தினகரனும் கூட்டணி சேர்ந்து அதிமுகவை வீழ்த்த நினைத்தனர். ஆனால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. என்னை கட்சியில் வளர்த்துவிட்டது தினகரன் தான் என அவர் கூறுகிறார். அவர் கூறுவது அனைத்துமே பொய்தான்.

1980ம் ஆண்டிலிருந்து நான் கட்சியில் இருக்கிறேன். வார்டு செயலாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் வரை உயர்ந்து பின்னர் ஜெயலலிதா சீட் வழங்கியதால் எம்.எல்.ஏவாகி, அமைச்சரானேன். ஆனால் தினகரன் 1998ல் தான் மக்களவை தேர்தலில் நின்றார். தினகரனைவிட 18 ஆண்டுகள் அரசியலில் நான் சீனியர். ஆனால் அவர் என்னை அரசியலில் வளர்த்துவிட்டதாக தினகரன் கூறுகிறார்.

தினகரன் கூறுவது எல்லாமே பொய்தான். அந்தந்த நேரத்தில் என்ன தேவையோ அதை பேசிவிட்டு போகிறவர்தான் தினகரன். சாதாரணமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட, என் ஒரு முகத்தை தான் பார்த்திருக்கிறீர்கள். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதை தேவைப்படும்போது நான் காட்டுவேன் என தினகரன் கூறுவார். அதேபோல, தான் ஒரு 420 என்பதை தினகரனே கூறுவார்.

வாக்காளர்களுக்கு ரூ.10000 கொடுப்பதாக பொய்யான வாக்குறுதியை தினகரன் தரப்பு கொடுத்துவிட்டு தற்போது டொக்கனோடு கொடுப்பார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது யாருக்கும் அனுமதியில்லை. அவருக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதால் பார்க்க அனுமதிக்கவில்லை. அதனால் அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை.

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை விசாரணை ஆணையத்தில் கொடுக்க வேண்டியதுதானே. அதிமுகவில் பிளவுகள் ஏதும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லையும் யாராலும் உருவ முடியாது என கூறினார்.


Next Story