ஆண்டாள் கோவில் சன்னதியில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்


ஆண்டாள் கோவில் சன்னதியில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2018 6:45 PM GMT (Updated: 2018-01-12T23:00:56+05:30)

வைரமுத்துவை கண்டித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை, 

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவை கண்டித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மயிலாப்பூர் கிளை தலைவர் ஜி.ராஜேஷ் நாராயணன், மந்தைவெளி கிளை தலைவர் கே.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விசுவ இந்து பரி‌ஷத் தலைவர் வேதாந்தம் ஜி, நடிகர் எஸ்.வி.சேகர், பாரதியார் மக்கள் கட்சி தலைவர் மயிலை சத்யா உள்பட ஏராளமான பிராமண பெண்களும் கலந்துகொண்டனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் பேசும்போது, ‘கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோவில் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து பேசியதை கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கும் எனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கையில் ஆண்டாள் படத்துடன், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

Next Story