காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் போக்கை முறியடிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்


காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் போக்கை முறியடிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Jan 2018 7:45 PM GMT (Updated: 12 Jan 2018 6:32 PM GMT)

தமிழக டெல்டா மாவட்டப் பகுதிகளில் 25 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் உள்ளது.

சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக டெல்டா மாவட்டப் பகுதிகளில் 25 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் உள்ளது. எனவே டெல்டா மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது.

சம்பா பயிர்களை காப்பாற்ற இன்னும் சுமார் 55 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் தமிழகத்தில் டெல்டா மாவட்ட பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டும், பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காப்பாற்றவும் கர்நாடகத்தின் காவிரியிலிருந்து குறைந்த பட்சம் 30 டி.எம்.சி. தண்ணீரையாவது பெறுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே காவிரியில் இருந்து தண்ணீரை பெற்று, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசின் வீண்பிடிவாதப்போக்கை முறியடிக்க மத்திய அரசை கண்டிப்போடு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story