பட்டாசு தொழிலாளர்கள் 23வது நாளாக தொடர் போராட்டம்


பட்டாசு தொழிலாளர்கள் 23வது நாளாக தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2018 3:15 AM GMT (Updated: 2018-01-17T10:23:49+05:30)

விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்கள் 23வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.#Sivakasi #latesttamilnews

சிவகாசி,

பட்டாசு வெடிப்பதால் சுற்று சூழல் மாசுபடுகிறது என கூறி சுப்ரீம் கோர்ட்டில் பட்டாசுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  இதனால் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன.  பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டம் இன்று 23வது நாளாக தொடருகிறது.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story