ரூ.68.91 லட்சம் லஞ்ச புகார்: போலீஸ் துணை சூப்பிரண்டு மீது வழக்கு பதிவு
ரூ.68.91 லட்சம் லஞ்ச புகாரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை,
சென்னையில் ‘குரோ ரிச் பவுண்டேசன்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் 2013-ம் ஆண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீட்டுத் தொகை வசூலித்ததாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க அப்போதைய பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் ரூ.68.91 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, அப்போது பொருளாதார குற்றப் பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றிய முகமது பலூலுல்லா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முகமது பலூலுல்லா தற்போது திருவாரூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றுகிறார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு உயர் அதிகாரி கூறும்போது, அந்த நிதி நிறுவனம் மீது கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக உரிய தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே முகமது பலூலுல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் தற்போது எடுக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story