ஐபிஎல் போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் -வேல் முருகன்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் போட்டி, ஐபிஎல் போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் என வேல் முருகன் கூறியுள்ளார். #IPL #IPL2018 #Velmurugan
சென்னை
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. ஐபிஎல் போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்.
சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல. மக்கள் தங்கள் உணர்வுகளை காட்டுவார்கள்.
நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள் போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்த நேரிடும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story