ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த 3ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 5ந்தேதி முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் கடந்த 8ந்தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் சாலை மறியல், கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தமீமுன் அன்சாரி, பி.ஆர். பாண்டியன், அமீர், கருணாஸ் ஆகியார் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் திருவல்லிகேணி காவல் நிலைய போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story